Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் பாட்டியாலாவில் ஒன்லைனில் பிறந்தநாள் கேக் ஓர்டர் செய்து சாப்பிட்டதால் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மான்வி என்ற அந்த சிறுமி மார்ச் 24 அன்று தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடினர்.

அப்போது, ஒன்லைன் உணவு விநியோக தளம் மூலம் வரவழைக்கப்பட்ட கேக்கை குடும்பத்தினர் வெட்டி உண்டனர்.

இந்நிலையில், அன்றிரவு கேக் சாப்பிட்ட மான்வி மற்றும் குடும்பத்தினர் சிலர் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள் காலை மான்வியின் நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

கேக் தயாரித்த ‘கேக் கண்ஹா'(Cake Kanha) என்ற பேக்கரியில் கேக்கில் தீமைக்கான பொருட்கள் இருந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

எனவே பேக்கரி உரிமையாளர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், கேக்கை விநியோகித்த பேக்கரி குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share: