Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாடளாவிய ரீதியில் இன்று உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்று பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 1,873 கிறிஸ்தவ தேவாலயங்களில் 6,522 பொலிஸ் அதிகாரிகள், 320 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 2,746 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Share: