தாய்லாந்து ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும் அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
தாய்லாந்து பாராளுமன்ற கீழவை ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கும் திருமண சமத்துவ சட்டமூலத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.
எனினும் அது சட்டமாவதற்கு முன் செனட் மற்றும் அரச ஒப்புதலை பெற வேண்டி உள்ளது.
2024 முடிவில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
இதன் மூலம் தாய்வான், நேபாளத்தை அடுத்து ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கும் ஆசிய நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து மாறும்.