அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு அருகிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது கொழும்பு நோக்கி புறப்பட்ட கொள்கலன் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து அமெரிக்க நேரத்தின்படி நேற்று அதிகாலை 01:25 மணியளவில் சம்பவித்தது.
பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளதுடன், இதனை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
குறித்த கப்பல் முழுக்க 22 பேர் கொண்ட இந்திய பணிக்குழாமினால் இயக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த விபத்தில் பாலத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த 6 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அங்கு நிலவும் குளிர்மையான காலநிலையால் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.