Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஆங்கில வழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற ஆங்கில வழி ஆசிரியர்களை மூன்று வருட காலத்திற்கு இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த ஆசிரியர்கள் தரம் 6 முதல் 11 வரையான வகுப்புகளுக்கு உள்வாங்கப்பட உள்ளதுடன், தேவைகள் தொடர்பாக அனைத்து மாகாணங்களிலிருந்தும் தகவல் அறிய அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. தேசிய பாடசாலைகள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தகவல் கிடைத்தவுடன் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இந்த சுற்றறிக்கையின்படி, இந்த ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறும் போது பெற்ற சம்பளத்துடன் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மேல்மாகாணத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share: