Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

உடுநுவர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 13,000 கிலோகிராம் கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) கம்பளை முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால், உடுநுவர, தவுலாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவெலிகொட பிரதேசத்தில் தேயிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 களஞ்சியசாலைகளில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது கழிவு தேயிலை தொகையுடன் களஞ்சியாசலை உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் களஞ்சியசாலைகளில் நீண்டகாலமாக கழிவு தேயிலைகள் தேங்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share: