Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சௌந்தரி டேவிட் ரொட்ரிகோ மற்றும் நெரஞ்சன் டி சில்வா ஆகியோருடன் இணைந்து செனுக் விஜேசிங்க வழங்கிய ‘My Tribute’ இசை நிகழ்ச்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று(19) பிற்பகல் கண்டுகளித்தார்கள்.

கொழும்பு லயனல் வென்ட் திரையரங்கில் நடைபெற்ற ‘My Tribute’ இசைநிகழ்ச்சியில் கிறிஸ்டோ பிரின்ஸ் டிரம்ஸ் இசைத்ததோடு நதினி ஒலேகாசெக்ரேம் மற்றும் ஹேமால் குருவிதாராச்சி ஆகியோரும் கலைஞர்களாக இதில் இணைந்து கொண்டனர். சோல் சவுண்ட்ஸ் அகாடமி பாடகர் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியில் பாடல் இசைத்தனர்.

தனது ஆரம்பக் கல்வியை வத்தளை லைசியம் இன்டர்நேஷனல் பாடசாலையில் பெற்ற ஷெனுக் விஜேசிங்க, லண்டனில் உள்ள ஸ்டெபோர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிக முகாமைத்துவப் பட்டதாரி ஆவார். இளம் வயதிலேயே பியானோ பயிற்சியை ஆரம்பித்த அவர் 5 வயதில் பாடத் தொடங்கினார் . லண்டனில் உள்ள ரோயல் ஸ்கூல் ஆஃப் சிங்ஜிங்கில் டேவிட் ரோட்ரிகோ மற்றும் சி ஹோ மேக் ஆகியோரின் கீழ் இவர் கற்றுள்ளார்.

 ஷெனுக் விஜேசிங்க பாடல், இசை மற்றும் நடிப்பு ஆகிய துறைகளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.

Share: