ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான உக்ரைனின் தாக்குதல்களை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 0.9 சதவீத உயர்வை பதிவு செய்து 83.47 அமெரிக்க டொலராக காணப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் இந்த அளவில் விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அத்துடன் ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.6 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 87.38 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் கனியவள உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை உக்ரைன் விரைவுபடுத்தியுள்ளது.
ரஷ்யாவின் 7 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைத்து உக்ரைன் ஆளில்லா விமான கருவி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.