குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்காக நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்துள்ளது.
2003ம் ஆண்டின் முதல்பாதியில் சமுர்த்தி பயனாளிகள் உட்பட 25 மாவட்டங்களில் உள்ள 2.74 மில்லியன் குடும்பங்களில், ஒரு குடும்பத்திற்கு 10 கிலோகிராம் நாட்டு அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோரின் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதற்காக இந்த வருடம் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவது சரியானது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி மாவட்ட செயலாளர்களால் அடையாளம் காணப்பட்ட சுமார் 2.74 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.