Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மஹாதீர் முகமது போன்ற தலைவருடன் ஒப்பிட்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்று குறுகிய காலத்தில் நாட்டை விட்டு ஓடிய போது வேலை தெரியாது என்று கூறப்பட்டவர், ஆட்சிப்பொறுப்பை தைரியமாக ஏற்று இந்த நாட்டினை சிறப்பாக வழிநடத்தி தொலைநோக்கு தலைவர் என்பதை நிரூபித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷா தெரிவித்துள்ளார்.

ஆறாவது ‘ஜெயகமு ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு பொலன்னறுவ தேசிய விளையாட்டு மைதானத்தில் நேற்று (17 )அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்,

காசியப்ப மன்னரால் வடிவமைக்கப்பட்ட சீகிரியா ஓவியம் டொலர்களை இன்றும் நாட்டுக்கு ஈட்டித்தருகின்றது.
அவ்வாறே பராக்கிரமபாகு மன்னன் பொலன்னறுவையில் பராக்கிரமபாகு சமுத்திரத்தை நிர்மாணித்து நீர்ப்பாசனத் தொழித்துறையை ஆரம்பித்தார்.

டி.எஸ். சேனநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா திட்டத்தினால் நாடு வளம்பெற்று அரிசியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

மக்கள் பதவியை விட்டு வெளியேற்றியபோது, ​​நாட்டைக் முன்னேற்ற முடியாது என்றபோதும், ​​எம்.பி. அமரகீர்த்தி கொல்லப்பட்டபோதும், வீடுகளுக்குத் தீ வைத்து சேதங்களை ஏற்படுத்திய போதும் ​​‘வேண்டாம்’ என்று சொன்ன ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மூலம் தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

ஜனாதிபதியின் தூரநோக்கு செயற்பாட்டினால் நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறது இதனால் மக்களின் வாழ்கை ஓர் அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது

இன்நிலமையை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டைக் கட்டியெழுப்பிய தொலைதூர தலைவர் என்பதைப் ரணில் விக்கிரமசிங்க நிரூபித்துள்ளார்.

மஹாதீர் முகமது போன்ற ஒரு தலைவர் கொண்டு வரப்பட்டார். அனால் அவர் பொருளாதார ரீதியில் தவறான முடிவுகளை எடுத்ததால் நாம் அதனை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

கருத்துக்களால் நாம் ஏமாற்றப்படாமல் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டில் மகிழ்ச்சியை உண்டாக்க வழிவகுக்க வேண்டும்.

பொலன்னறுவையில் எத்தனை சுற்றுலா பயணிகள் உள்ளனர்? சிறிய விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வேண்டும். ஒரு சிறிய பட்டாம்பூச்சியின் இறக்கைகள் படபடப்பதன் புயல் உருவாகலாம்.

இந்த நாட்டை கட்டியெழுப்ப நாம் ஒவ்வெருவரும் எம்மில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதுதான் உண்மையான பொருளாதாரப் போராட்டம். அந்தப் போராட்டத்தை அரசு என்ற ரீதியில் முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளோம். எனவே இந்தப் பொருளாதாரப் போராட்டத்தில் எம்மால் வெற்றி பெற முடியும்.

அதன் அடிப்படியில் ஜயகமு ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் திறமைமிக்க இளைஞர்களை உருவாக்குவதற்காக SMART YOUTH CLUB ஸ்தாபிக்கப்பட்டுள்ளது .

இத்திட்டத்தின் ஊடாக ஹோட்டல் முகைமாத்துவம் ,நீர்குழாய் பொறுத்தல்.வரணம் பூசுதல் .மற்றும் வெல்டிங் போன்ற அனைத்து தொழித்துறைகளுக்கும் பயிற்சிகள் பிரதேச மட்டத்தில் வழங்கப்படுகின்றன.

இதற்காக ஜனாதிபதி நிதியம் நிதி உதயளிக்கிறது ஆர்வமுள்ளவர்கள் பதிவுகளை இன்றே www.glocal.lk என்ற இணையத்தளத்தில் மேற்கொள்ளமுடியும்.

இளைஞர்களை ஒன்றிணைப்பதனால் பொருளாதாரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

Share: