வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் அடுத்த வருடம் முதல் படிப்படியாக தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இளைஞர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சரியான தொலைநோக்குப் பார்வை இல்லாமல் அரசியல் வாக்குறுதிகள் வழங்கப்படுவதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் அத்தியாவசிய வாகனங்களை படிப்படியாக இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவு, இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பஸ்களை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.