Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது

அணிசார்பில் அதிகபடியாக, குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், மெத்யூஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் சௌமியா சர்க்கார் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தநிலையில், அணி 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 53 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்க​மை 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.

Share: