Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இலங்கை மக்கள் தமது புகைப்படத்துடன் கூடிய முத்திரையை அச்சிட்டு பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கை தபால் திணைக்களம் தற்போது வழங்கியுள்ளது.

நாட்டின் மிகப் பழமையான தனியார் வர்த்தக வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று (06) காலை நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே தபால் மா அதிபர் ருவன் சத்குமார இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்கள் படத்துடன் ஒரு முத்திரையை அச்சிடலாம். ரூ. 2,000 பெறுமதியான 20 முத்திரைகள் கொண்ட தாள் இவ்வாறு புகைப்படம் அச்சிட்டு கொடுக்கப்படும் . உங்கள் பிறந்தநாள், உங்கள் நண்பரின் பிறந்தநாள், உங்கள் மகன் அல்லது மகளின் மகன் திருமண படம் போன்றவற்றை முத்திரையில் பதிக்கலாம். இது பொதுவாக தபால்தலையாக பயன்படுத்தப்படலாம் என்றார்

Share: