Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரக் குறியீட்டின் படி, கொழும்பின் காற்று மாசு மதிப்பு 127 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலை சுவாச நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருணாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.

நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50 ஐ தாண்டியிருப்பதால், சுவாச நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மக்கள் இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share: