Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இன்று (04) முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் தன்னியக்க தொலைபேசி அமைப்பின் கீழ் வழங்கப்படும் சேவைகளை மற்றும் இணையத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் கடும் நெரிசலுக்கு தீர்வாக, நாட்டின் 25 மாவட்டங்களில் அமைந்துள்ள கிளை அலுவலகங்களை உள்ளடக்கும் வகையில் இந்த ஆன்லைன் சந்திப்பு முன்பதிவு செயல்முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நீங்கள் தானியங்கி தொலைபேசி அமைப்பு மூலம் தங்களுக்கான சந்திப்பு நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இன்று ஆரம்பமாகவுள்ள புதிய முறைமை தொடர்பில் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க,

“.. அனைத்து வாடிக்கையாளர்களும் முன்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நாளில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வர வேண்டும். இது முதன்முதலில் கொவிட் காலத்தில் செயல்படுத்தப்பட்டது. நாங்கள் 2 117 116 என்ற தானியங்கி தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது மூன்று மொழிகளிலும் உங்களுக்குத் தேவையான சேவையை தானாகவே வழங்கும். “

இதன் மூலம் வினைத்திறன் மற்றும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

“அதுமட்டுமின்றி இணையதளம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். https://dmtappointments.dmt.gov.lk/ இணையதளம் மூலம் தங்களுக்குத் தேவையான சேவையைப் பெறுவதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது..”

Share: