Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலுடன் தான் பணியாற்றிய அனுபவமே இன்று தனது அரசியல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரியான தீர்மானங்களை எடுத்து அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தி முடிவுகளைப் பெறுவது ரொனி டி மெல் அவர்களின் குணாதிசயத்தின் சிறப்பு என நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய அரசியல்வாதி அவர், நாட்டுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ரொனி டி மாலின் இறுதிக்கிரியைகள் நேற்று (01) பிற்பகல் ருஹுனு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரொனி டி மாலின் இறுதி விருப்பத்தின்படி இறுதிக் கிரியைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாகனப் பேரணியில் பல்கலைக்கழக மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ருஹுணு பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் அடக்கம் செய்ய இறுதிச் சடங்குகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது ரொனி டி மாலின் இறுதி விருப்பத்திற்கமைய, நானும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இறுதிச் சடங்கில் ஒன்றாக கலந்துகொண்டு உரையாற்றினோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Share: