Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மார்ச் 4 ஆம் திகதி முதல் மக்கள் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சேவைக்காக திணைக்களத்துக்கு வரும் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், தலைமை அலுவலகம் மற்றும் பிற கிளைகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை ஏற்பாடு செய்யவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://dmtappointments.dmt.gov.lk/ இல் பதிவு செய்யுமாறும் அல்லது தானியங்கி தொலைபேசி சேவையான 0112117116 ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2117116 என்ற பொது இலக்கத்துடன் பகுதிக் குறியீட்டை உள்ளிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share: