ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீடுகளை உடைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள 1180 திருட்டு சம்பவங்களும் 310 கொள்ளைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் குற்றச் செயல்களை தடுப்பதற்கான பல்வேறு வகையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்றைய தினம் வரை 20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் பத்து சம்பவங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் புரியும் தரப்பினரின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.