Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக மாணவர்களுக்கான தாக்கத்தை குறைக்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் புதிய ஆலோசனை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, கல்வி அமைச்சு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் அவசியமான அலுவல்கள் தவிர்ந்த பிற செயற்பாடுகளுக்காக மாணவர்களை வீடுகளிலிருந்து அல்லது பாடசாலையிலிருந்து வெளியே அனுப்புவதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக வெப்பநிலை நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும், அவர்கள் ஓய்வெடுப்பதற்காக குறைந்தபட்சம் இரண்டு குறுகிய நேர இடைவேளைகளை வழங்குவது பொருத்தமானதாகும் எனவும் கல்வி அமைச்சின் வழிகாட்டுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி அணிவதை தவிர்க்க முடியும் என்பதுடன், தகரங்களினால் அமைந்த கட்டடங்களில் இருந்து தற்காலிகமாக மாணவர்களை ஏனைய பொருத்தமான கட்டடங்களுக்கும் அனுமதித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து வலய கல்வி பணிப்பாளர்களின் ஊடாக சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share: