மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்றஸ்பி தோட்ட குமரித் தோட்டப் பிரிவில் நேற்றிரவு ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணைகளை மேற்கொண்டது.
இதன்போது இரு பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் (40 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் காணாமல்போயுள்ளார் என அவரின் மனைவியால் ஐந்து நாட்களுக்கு முன்னர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.