உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றைய தினம் மீண்டும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கைதாகியுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பையும், நேற்று முன்தினம் முதல் தொடர் உண்ணாவிரதத்தையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் நேற்று மாலை முன்னெடுத்த பேச்சுவார்த்தையையடுத்து, உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு என்பன கைவிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக கடலுக்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.