எல்பிட்டிய – கரந்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
51 வயதுடைய தலைமை பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (26) காலை 7.05 மணியளவில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.