ராஜகிரிய – ஒபயசேகரபுர – நியூகொலன்னாவ வீதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றில் இன்று பகல் தீப்பரவல் ஏற்பட்டது.
பொலிசாரின் உதவியுடன் தீயணைப்புபடையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த தீப்பரவலால் பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது்
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராஜகிரிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.