சீனாவின் சௌச்சொவ் பகுதியில் உள்ள வீதியில் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சௌச்சொவ் நகரை பாதித்த வானிலையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார் விபத்து நடந்த பகுதியில் கடும் பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், நேற்று முன்தினம் (22) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.