Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கொவிட் தடுப்பூசி, இதயம், மூளை மற்றும் இரத்த கோளாறுகளில் சிறிதளவு அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்காவிடின் கொரோனா வைரஸ் பரவல், அதிவிட அபாயகரமாக அமைந்திருக்கும்  என அது தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான “Global Vaccine Data Network” மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எட்டு நாடுகளில் கொவிட் தடுப்பூசியைப் பெற்ற 99 மில்லியன் மக்களைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளதுடன், இது கொவிட் தடுப்பூசிகள் குறித்து இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆராய்ச்சியாகக் கருதப்படுகிறது.
   
உலக மக்கள் தொகையில் 71% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share: