இலங்கைக்கு சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சரிபோ டீன் தெரிவிக்கையில்,
“இந்த கப்பல்களில் பெரும்பாலான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும், மேலும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளது.
இங்கு வரும் ஒரு சொகுசு பயணிகள் கப்பலில் சுமார் 1000 பயணிகள் இருப்பதாகவும், ஒரு கப்பல் இரண்டு நாட்களுக்கு இந்த நாட்டின் துறைமுகங்களில் நங்கூரமிடப்படும்.
இந்த சொகுசு பயணிகள் கப்பல் நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும்.
இவ்வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 350,000ஐத் தாண்டியுள்ளது.
எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஏறக்குறைய 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் இந்த ஆண்டு அது 25 இலட்சமாக அதிகரிக்கும்” என தெரிவித்தார்.