சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக்க வக்கும்புர சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு சுற்றாடல் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.