Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இலங்கையில் பிறப்புவீதம் குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால் 2018 இல் அந்த எண்ணிக்கை 328,000 ஆகக் குறைந்துள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டளவில் முதலாம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைந்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஐந்தாம் தரத்தில் 327,849 மாணவர்கள் சேர்க்கப்பட்ட 2018ஆம் ஆண்டில் அது 347,500 ஆக அதிகரித்திருந்தது.

2022ஆம் ஆண்டில் 328,000 மாணவர்கள் ஐந்தாம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 2012ஆம் ஆண்டு பாடசாலைக் காலத்தில் (வழக்கமான நிலை வரை) பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை 16.07 வீதமாக இருந்த போதிலும் தற்போது அது 7 வீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. ஆனால், 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் பாடசாலையை விட்டு அதிகமாக வெளியேறியுள்ளனர்” என தெரிவித்தார்.

Share: