தற்போது சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக இன்று (11) காலை கட்டுகம்பலையில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , முன்னாள் அமைச்சரின் நலன் பற்றி விசாரித்ததோடு சிறிது நேரம் அவருடன் உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் குடும்ப உறுப்பினர்களிடம் அவர் பற்றிய தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி, காமினி ஜயவிக்ரம பெரேராவின் வீட்டிற்கு அருகில் ஒன்று கூடிய பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக உரையதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், காமினி ஜயவிக்ரம பெரேராவின் புதல்வரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசங்க ஜயவிக்ரம, குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் .தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.