Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நமது நாட்டில் இடம்பெறும் சில சம்பவங்களை பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? என தெரியாமல் பலரும் விழிப்பிதுங்கி இருப்பது மட்டுமன்றி திகைத்தும் போய் நின்கின்றனர்.

அதிலொரு சம்பவம், அம்பாறை மோட்டார் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.

சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அவ்வாறு விண்ணப்பிக்கும் சகலருக்கும் நடைமுறை சோதனைக்கான (Practical test date) திகதி அறிவிக்கப்படும்.

எனினும், அம்பாறை மோட்டார் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சோதனைக்கான திகதியே, விண்ணப்பித்தவருக்கு சோதனையாகியுள்ளது.

அதில், குத்தப்பட்டுள்ள இறப்பர் முத்திரையில், 2024 பெப்ரவரி 30ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு வருடத்திலும் 30 ஆம் திகதி இல்லை. இதில், இவ்வருடம் 30 ஆம் திகதி வருமாறு அழைத்துள்ளனர். அவ்வாறு அழைக்கப்பட்டமையே பெரும் சோதனையானது என பலரும் தெரிவிக்கின்றனர். 

Share: