அரச பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான சகல ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 16 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த பணிகளில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடத்தில் செலுத்தும் கட்டணத்தையே செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.