Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பில் தகவல் தருவோருக்கு பண வெகுமதிகள் வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நாடு தழுவிய ‘யுக்திய’ நடவடிக்கைக்கு இணங்க பணச் சலுகைகளை அறிமுகப்படுத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், பிரதிப் காவல்துறை மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தானியங்கி துப்பாக்கிகளுடன் (T56, AK47, M16, SAR 80, T81) சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய உதவினால் 250,000 ரூபாய் வழங்கப்படும்.

சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தானியங்கி துப்பாக்கியை (T56, AK47, M16, SAR 80, T81) மீட்டெடுப்பதற்கு வழிவகுக்கும் தகவலுக்கு 250,000 ரூபாய் வழங்கப்படும்.

அரை தானியங்கி துப்பாக்கிகளை (பிஸ்டல்கள், 84 எஸ்எல்ஆர், ஒட்டோ-லோடிங் சொட்கன்கள்) மீட்டெடுக்க 250,000 ரூபாய் வழங்கப்படும்.

ரிவோல்வர் ரக துப்பாக்கியை வைத்திருக்கும் சந்தேக நபரை கைது செய்ய 150,000 ரூபாய் வழங்கப்படும்.

சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ரிவால்வரை மீட்டெடுப்பதற்கு 100,000 ரூபாய் வழங்கப்படும்.

ரிப்பீட்டர் ரக துப்பாக்கியை மீட்டெடுப்பதற்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகளுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்.

சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து கைக்குண்டொன்றை மீட்டெடுப்பதற்கு 25000 ரூபாயும், சந்தேகத்திற்கு இடமின்றி அதனை மீட்பதற்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மீட்டெடுப்பது குறித்த தகவல்களுக்கு 15,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Share: