வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக எந்தவொரு நிறுவனத்திடமோ? அல்லது நபரிடமோ? தங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன்னர், அவ்வாறான தரப்பினர்களுக்கான அனுமதி தொடர்பில் கவனம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கோரியுள்ளது.
அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் மற்றும் அது சார்ந்த தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
இதுதவிர 1989 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திகொள்ள முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த பணியகம் எச்சரித்துள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து இடம்பெற்ற பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.