நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை கிறிஸ் ட்ரான்ஸ்வர்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்கி 70 மில்லியன் ரூபா முறைக்கேடு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரவி வித்தியாலங்காரவினால், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.