தாய்வான் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனா தெற்கு வான்வெளியில் ஒரு செயற்கைக் கோளை ஏவியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தாய்வானில் உள்ள சகல கையடக்க தொலைபேசிகளுக்கும் வான்வழித் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்வான் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் சீனா இந்த பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சீனாவின் செயற்கைக் கோள் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.03 அளவில் ஏவப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.