Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட ஆய்வில், பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமரின் கேள்வி நேரத்தில்,  SJB பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, VAT அதிகரிக்கப்பட்ட போதிலும் தேங்காய் எண்ணெய், பருப்பு, கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். 

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் விலை வற் அதிகரிப்பிற்கு முன்னரும் தற்போதும் ரூ.600 ற்கே விற்பனையாகிறது.

 ஒரு கிலோ கிராம் பருப்பு ரூ. 320 ,ஒரு கிலோ கிராம் கோதுமை மா ரூ. 220 என அதே விலையில் விற்பனையாகிறது.

 VAT அதிகரித்த பின்னர் ல்  ஒரு முட்டையின் விலை ரூ.60 இலிருந்து ரூ51 ஆக குறைந்துள்ளது.

” VAT அதிகரிப்பு குறித்து எம்.பி.க்கள் மத்தியில் பரபரப்பு இருந்தாலும்,சந்தை பரபரப்படையவில்லை,” என்று இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

 இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த எம்.பி. மரிக்கார், நாட்டில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடியின் சுமார் 500 விற்பனை நிலையங்கள் புத்தாண்டு தொடக்கத்திற்குப் பிறகு தங்கள் விற்பனை வீழ்ச்சியின் விளைவாக மூடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *