இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இன்று (17) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் செமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இலங்கை அணி 06 விக்கெட்டுகளை இழந்து இன்று பெற்ற ஓட்ட எண்ணிக்கையே இவ்வருட உலகக் கிண்ணத்தில் இதுவரை அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
இலங்கை சார்பாக குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 46 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 14 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
அதன்படி இந்தப் போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.