Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கிளிநொச்சி – பளை கச்சார்வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது.

வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 5 ஆம் திருவிழாவான மாம்பழத்திருவிழா நேற்று (17) நடைபெற்றது.

மாம்பழத்திருவிழாவில் வசந்தமண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும் விநாயகப் பெருமானின் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

இதன்போதுஇ பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்றுள்ள நிலையில் கச்சார்வெளியினை சேர்ந்த அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் அதனை ஆறு இலட்சம் ரூபாவிற்கு வாங்கியுள்ளனர்.

Share: