இந்தியாவில் ஒரே தண்டவாளத்தில் பயணித்த ரயில்கள் மோதியதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ரங்காபாணி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா கடுகதி ரயில் ஒன்றும், சிக்னல் கிடைக்காததால், நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு சரக்கு ரயில் மேற்படி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கஞ்சன் ஜங்கா கடுகதி ரயிலின் 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன.ஷ
ரயிலில் இருந்த 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.