கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று மாலை பல ஆயிரக்கணக்கான மக்களை பேருந்துகளில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
“ஏதோ வினோதமான காரணத்திற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று மாலை சில ஆயிரம் பேரை பேருந்துகளில் யாழ்ப்பாணம் வரை அழைத்து வந்து அவர்களுடன் இங்கு பேசினார். அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்று அவர்களிடன் பேசியிருந்தால் போக்குவருத்து செலவை குறைத்திருக்கலாம். சிங்கள மக்களுக்கு அவரது உரையின் தமிழாக்கம் வழங்கப்பட்டது,” என்று அவர் X இல் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளர்.