Categories: Sports News

இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில்  Michael Bracewell மற்றும் Zakary Foulkes ஆகியோர் தலா 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக செயற்பட்ட நிலையில், Dunith Wellalage 03 விக்கெட்டுக்களையும், Nuwan Thushara, Wanindu Hasaranga, Matheesha Pathirana ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி இலங்கை அணிக்கு 136 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Fathima Hafsa

Recent Posts

ஜனாதிபதியின் யாழ்ப்பாண கூட்டத்திற்கு வேறு மாவட்டங்களிலிருந்து பஸ்களில் ஆட்களை அழைத்து வந்துள்ளதாக விமர்சனம்.

கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…

5 days ago

திருகோணமலையில் எத்தனை வேட்பாளர்கள் இருந்தாலும் MS தௌபீக் இற்கு மக்களின் பலத்த ஆதரவு…செல்லுமிடம் எங்கும்அமோக வரவேற்பு…

திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…

5 days ago

மாணிக்கக்கல் வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…

6 days ago

பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

6 days ago

அனைத்தும் மக்களை ஏமாற்றும் நாடகம்.

இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…

6 days ago

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு தான் எங்கள் போராட்டம் ஆரம்பமாகும் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…

7 days ago