கண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரோஹித அபேகுணவர்தன, குறித்த வாகனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என மறுத்தார்.
“ஊழல் மற்றும் மோசடி செய்வதற்காக நான் அரசியலில் ஈடுபடவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், உண்மையைக் கண்டறிந்த பிறகே பேச வேண்டும் என்று கூற விரும்புகிறேன்,” என்றார்.
வாகனங்கள் இப்போது தனது மருமகனின் சகோதரனுடையது என்று சமீபத்திய அறிக்கைகள் கூறுவதாகக் கூறிய அவர், “என்னுடைய நண்பன் தவறு செய்தால், அது என் தவறா? நான் பொறுப்பேற்க வேண்டுமா?”
தாம் தவறு செய்திருந்தால் தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமாறு ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு சொகுசு வாகனங்களுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுவில் இருந்து விலகுவதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டி குற்றத்தடுப்புப் பிரிவினர் அண்மையில் கண்டி, அனிவத்தையில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கேரேஜில் BMW மற்றும் சொகுசு SUV வாகனம் ஒன்றைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாகனம் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் அவர் துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…