குமார் யூடியூப்பில் வீடியோவைப் பார்த்து என் பேரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதை நான் நேரில் பார்த்தேன். பித்தப்பை கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்வதாக அவர் எங்களிடம் தெரிவிக்கவும் இல்லை, அனுமதியும் பெறவில்லை.
கோலுவின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பாட்னாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே கோலு உயிரிழந்தான் என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக குடும்பத்தினர் செப். 7ஆம் திகதி அளித்த புகாரின்பேரில் அஜித் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யூடியூப் மூலம் தவறான அறுவைச் சிகிச்சை செய்ததால் சிறுவனின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது