“வங்கதேச அணிக்கு எதிரான தோல்விக்காக பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் அணியை எப்படி மேம்படுத்தலாம், எப்படி முன்னோக்கி கொண்டுசெல்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.” என்று பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியோ 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்ஸை தொடங்கினாலும் வங்கதேசத்தின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள இயலவில்லை.
இதனால், பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் பவுலர்கள் தவறினர்
இதனால், 56 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வங்கதேச அணி வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக வங்கதேசம் கைப்பற்றி சாதனை படைத்தது. அதேநேரம், ஒயிட் வாஷ் பெற்ற பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கருப்பு நாள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பேசுகையில், “தோல்விக்காக பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் அணியை எப்படி மேம்படுத்தலாம், எப்படி முன்னோக்கி கொண்டுசெல்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.கிட்டத்தட்ட 10 மாத இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எளிதான காரியம் கிடையாது. இந்த தோல்விக்கு எந்தவித காரணம் இல்லை. தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக செயல்பட விரும்பினர் என்பது உண்மை. ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வீரர்கள் யாரும் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தயாராக இல்லை. அணியை முன்னேற்ற விரும்பினால் தோல்விகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். முதல் படியாக நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பந்து வீச்சாளர்களுக்கு நிலையான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…
லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…