Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கலவரங்களின் பின்னணியில் ஜே.வி.பி. பேய்கள் மிருகத்தனமாக செயற்பட்டதை யாரும் மறந்துவிட கூடாது என நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க சாடினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும்,  இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளருமான சுப்பையா சதாசிவம் தலைமையில் அதன் முதலாவது பிரச்சார கூட்டத்தை  நுவரெலியா மாநகர சபை வாசிகசாலை மண்டபத்தில்  நேற்று மதியம் நடத்தியது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த நாட்டில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டின் அனைத்து தொழில் துறைகளிலும் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டது.

இதன் காரணமாக நாட்டு மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல முடியாது பாதிக்கப்பட்டனர். அதேபோல அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுபாடு, பொருளாதார பாதிப்பு என பல வகையிலும் நாட்டு மக்கள் முகம் கொடுக்க நேரிட்டது.

இந்த சூழ்நிலையில் நாட்டில் அடுத்து வந்த பொருளாதார வீழ்ச்சி இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தேசிய மக்கள் சக்தி நாட்டின் அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சாதாரண போராட்டத்தை  அரகல எனும் நாமம் சூட்டி அப்போராட்டத்தை பெரிதாக்கியவர்களும் இவர்களே.

இந்த நிலையில் 1970-1989 காலம் வரை ஜே.வி.பினரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை போல அரகலை நேரத்திலும் வன்முறைகளை கையாண்டு  நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் வீட்டு சொத்துக்கள் பணம் நகையை கொள்ளையிட்ட்ட இவர்கள் 77 வீடுகளை எறித்து நாசமாக்கினார்கள்.

இதன்போது எனது வீட்டையும் எறிக்க ஒரு குழுவினர் வந்தார்கள். ஆனால், எனது வீட்டில் பத்து துப்பாக்கிகள் இருந்தது அவர்கள் ஓடிவிட்டார்கள் அவர்கள் மீறியிருந்தால் அவர்களை சுட்டுடிருப்பேன் என்றார்.

Share: