சஜித் பிரேமதாசா தலைமையிலான அரசு வந்தால் கொழும்பில் இருக்கும் மிக ஆடம்பர மாளிகையான ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என்கின்ற நல்லெண்ணத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இருக்கிறார் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர், அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த மண்ணில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் விளையாட்டுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு பொத்துவில் மண்ணுக்கான நிரந்தர தீர்வை பெற வேண்டுமானால் இந்த மண்ணுடைய தாகமாக இருக்கின்ற பொத்துவில் வலய கல்வி பணிமனையை 22 ஆம் தேதி ஜனாதிபதியாக மாறுகின்ற பொழுது சஜித் பிரேமதாச நிச்சயமாக உருவாக்கி தருவார்.
அதேபோன்று பொய் கூறி தெரிகின்ற முகுது மகா விகாரை வர்த்தமானி விவகாரம் நூற்றுக்கு 200 வீதம் பொய். பொத்துவில் மண்ணை சிறைப்பிடித்து விட்டு நம் மண்ணில் பொய் கூறி திரிகின்றார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை சஜித் ஜனாதிபதியானதும் பெற்றுத்தருவார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பதவியில் இருக்கின்ற அந்த ஐந்து வருடத்தில் ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான வாகன உறுதி பத்திரம் கொடுப்பார்கள். ஜனாதிபதி ரனில் விக்ரம சிங்க அவர்களும் அந்த உறுதி பத்திரத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொடுப்பதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்து இருந்தார். அப்பொழுது அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது வாகன உறுதி பத்திரத்தை ஆளும் கட்சி எம்பிமார்களும் கேட்டு இருக்கின்றார்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்பிமார்கள் கேட்டிருக்கின்றார்கள். இது சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு ஒப்புதல் வழங்குகின்ற போதுதான் தீர்மானம் எடுக்க முடியும் என்று அமைச்சரவை தீர்மானித்த பொழுது. எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் சந்திப்பு பிரேமதாசாவுக்கு அவருடைய கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களை கொடுத்த போதிலும் அந்த அழுத்தத்திற்கு அடிபணியாமல் இந்த வாகன பேமிட்டுக்கு நான் ஒப்புதல் வழங்க மாட்டேன் என்று அந்த தீர்மானத்தை எடுத்தவர் தான் எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா என்றார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…