Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐஐசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்றும், அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெய் ஷா மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2019 ஆண்டு அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஆண்டு ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராக பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டாம் என்று முடிவு செய்ததால் ஜெய் ஷா தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Share: