Categories: Local News

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட “பிரேமதாச” குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சபிக்கப்பட்ட குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்துகிறார்.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் அரசியலில் பலரால் தவறவிடப்பட்ட ஒரு ஜனநாயகத் தலைவர் என்றும் அமைச்சர் கூறினார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

குடும்ப ஆட்சி என்பது ஒரு நாட்டுக்கு சாபக்கேடு. குடும்ப ஆட்சியில் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை. குடும்ப ஆட்சி பற்றி பேசும் போது அனைவரும் ராஜபக்ச குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறார்கள். ஆனால் பிரேமதாச குடும்ப ஆட்சி பற்றி பேசப்படுவது குறைவாகவே உள்ளது.

2015-2019 காலப்பகுதியில், சஜித் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது, அமைச்சர் சஜித் வீடமைப்பு அமைச்சில் அதிகம் செயற்படவில்லை. அவரது மனைவி ஜலானி பிரேமதாசா தான் செயற்பட்டார். இன்று ஐக்கிய மக்கள் சக்தி குடும்ப ஆட்சியின் கீழ் மட்டுமே உள்ளது. கட்சியை ஓட வைப்பது சஜித் பிரேமதாச அல்ல. அவரது மனைவி ஜலனி பிரேமதாச மற்றும் தொழிலதிபர் லக்‌ஷ்மன் பொன்சேகாவும். இப்போது சஜித்தின் சகோதரி வேலையில் இறங்கி விட்டார். நான் பொய் சொல்கிறேன் என்றால், இதைப் பற்றி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்த குடும்ப ஆட்சியால் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல எம்.பி.க்கள் விரக்தியடைந்துள்ளனர்.

அது சாத்தியமற்றதாக இருந்தாலும் சஜித் வெற்றி பெற்றாலும் சஜித் பிரேமதாசவும் அவரது குடும்பத்தாரும் நாட்டை ஆளுவார்கள். சஜித்தின் அரசின் அமைச்சர்கள் வெருளிகளாக இருப்பார்கள்.

மேலும், அநுரகுமார வெற்றி பெற்றாலும் நாட்டை மீண்டும் கல் காலத்திற்கு கொண்டு செல்வார். லால்காந்தவின் கதைகளை கேட்கும் போது அவர் சுயநினைவின்றி பேசுவதாகவே உணர்கிறோம். ஜே.வி.பி.யில் இரத்தவெறி பிடித்த அறிவிலிகளை வைத்து எப்படி நாட்டை ஆட்சி செய்வது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குடும்ப ஆட்சியை நிராகரித்த ஜனநாயக தலைவர். ஜனாதிபதியின் மனைவி ஒரு கூட்டத்தில் கூட இல்லை. விக்கிரமசிங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் என்ற வகையில் எங்களின் பணிகளில் தலையிடுவதில்லை. ரணில் விக்கிரமசிங்க உண்மையான ஜனநாயக பண்புகளை கொண்ட தலைவர்.

ரணில் விக்கிரமசிங்க அரசியல்வாதிகளாகிய எங்களால் நீண்ட காலமாக தவறவிடப்பட்ட ஒரு அரசியல் தலைவர், ஒரு நாட்டை எவ்வாறு தேசிய நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பது என்பதை இரண்டு தலைவர்கள் செயலில் நிரூபித்துள்ளனர், ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அன்றைய தினம் எல்.டி.டி பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. இன்றைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. அதனால்தான் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்னும் தலைமைத்துவத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளனர் என்று நான் எப்போதும் கூறுகின்றேன். தற்பெருமை பேசாமல் அந்த மனிதர்கள் எப்படி ஒரு நாட்டை ஆள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் ஜனாதிபதி இருக்கும் பாதையை விட்டால், நாம் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக நீங்கள் இம்முறை புத்திசாலித்தனமாக கேஸ் சிலிண்டருக்கு முன்னால் வாக்களியுங்கள். அதுவே இந்த நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் செய்யும் மிகப்பெரிய முதலீடாகும்.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

4 weeks ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

7 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

7 months ago