Categories: Local News

வவுனியா வைத்தியசாலையில் பலியான சிசு : தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்திய வைத்தியர்கள்

வவுனியா (Vavuniya) வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் தந்தையை அழைத்து வைத்தியசாலை நிர்வாகம், உள்ளக விசாரணையொன்றை செய்வதாகவும் குறித்த பிரச்சினைணை கைவிடுமாறும் கோரியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் பெற்றோருக்கு நீதி கிடைக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று (21) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள சிசு

வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்றிரவு (20) அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாயொருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக பெற்றோரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு பல தடவை வைத்தியர்களிடம் கோரிய போதும் அதனை பொருட்படுத்தாமல் வைத்தியர்கள் செயற்பட்டமையினால் தனது சிசு இறந்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனடிப்படையில், சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி பொதுமக்களால் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய்

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, “குழந்தையின் தாய் வலிதாங்க முடியாமல் பல மணி நேரங்கள் கதறிய போதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை.

இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும். 

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

எனவே சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும்.

சட்ட வைத்திய பரிசோதனை

அது போலவே சிசுவின் சட்ட வைத்திய பரிசோதனையினையும் கொழும்பு (Colombo) வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு, பொறுப்பே இல்லாத இந்த வைத்தியசாலைக்கு மூன்று பணிப்பாளர்கள் இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை எனவே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும்வரைக்கும் பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதேவேளை இன்று (21) மாலை சிசுவின் சடலத்தை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

4 weeks ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

7 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

7 months ago