கொமரோஸ் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்த எரிபொருள் தாங்கி கப்பல் இன்று (16) ஓமான் கடலில் விபத்துக்குள்ளானது.
அந்த கப்பலில் பணிபுரிந்த மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பேர் கொண்ட பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக ஓமான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த மீதமுள்ள 13 பணியாளர்கள் இந்திய பிரஜைகள் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த கப்பலின் பணியாளர்களை தேடும் பணியை இந்தியா ஆரம்பித்துள்ளது.
அதற்காக ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.